ஜிகர்தண்டா DOUBLE X: ராகவா லாரன்ஸின் அட்டகாசமான நடனத்தில் வந்த கலக்கலான "மாமதுரை" வீடியோ பாடல் இதோ!

ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா DOUBLE X பட மாமதுரை வீடியோ பாடல் வெளியீடு,raghava lawrence in jigarthanda double x video song out now | Galatta

நாளை நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திலிருந்து ராகவா லாரன்ஸின் அட்டகாசமான நடனத்தில் "மாமதுர" வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்த மாமதுர பாடலை பிரபல பாடகி உடன் இணைந்து சந்தோசம் நாராயணன் பாடியிருக்கிறார். வழக்கமான ராகவா லாரன்ஸ் இல்லாமல் முற்றிலும் வேறு ஒரு ஆளாக இறங்கி கலக்கி இருக்கும் லாரன்ஸ் மாஸ்டர் இந்த மாமதுர பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் ஸ்டைல் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ஆரம்பம் முதல் இறுதி வரை துள்ளலாக இருக்கும் இந்த பாடல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மாமதுர வீடியோ பாடல் இதோ…

 

தனக்கென தனி பாணியில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய ஸ்டைலில் கதை சொல்லும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ட்ரேட்மார்க் ஸ்டைலில் உருவாக்கி இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLEX ட்ரெய்லர்கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 1975 காலகட்டங்களில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLEX படத்தின் ட்ரெய்லரில், " இப்போ இருக்கிற சினிமாவில இப்படி ஒரு கருப்பு ஹீரோ” என்ற வசனம் இடம் பெற்று இருக்கிறது. அந்த காலகட்டத்தில் கருப்பாக இருப்பவர்கள் நடிகராக நுழைவதும் வளர்வதும் மிக கடினமாக இருந்த சூழலை பற்றி பேசும் படமாக தயாராக இருக்கும் இந்த ஜிகர்தண்டா DOUBLE X படத்தில் குறிப்பிடப்படும் அந்த 1975 ஆம் ஆண்டில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ், அந்த 1975 களின் காலகட்டத்தில் கருப்பு ஹீரோவாக அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மனதில் வைத்த இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2வது பாகமான கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிற இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். தீபாவளி கொண்டாட்டமாக வெளிவர இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி 9AM மணி முதல் 1.30AM வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வீதம் நாளை நவம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.