தென்னிந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஜே சூர்யா. அஜித் குமார், விஜய் என்று ஒரே காலக் கட்டத்தில் இரு பெரும் நட்சத்திரங்களை இயக்கி காலம் கடந்தும் பேசப்படும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர். பின் நடிகராகவும் பல படங்களில் நடித்து இன்று முக்கியமான படங்களில் குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தேர்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. இவர் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் செஞ்சர்’ படத்திலும் மற்றும் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடயே எஸ் ஜே சூர்யா நடித்து முடித்து நீண்ட நாட்களுக்கு பின் இன்று ஜூன் 16 வெளியாகவிருக்கும் திரைப்படம் பொம்மை. அட்டகாசமான முன்னோட்டங்கள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்ட அதன்படி இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவல் கொண்டு இருந்தனர். தற்போது திரையரங்குகளில் வித்யாசமான கதைகளத்தில் பொம்மை திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கான முக்கியமான 5 காரணங்கள் குறித்த சிறப்பு தொகுப்பிணை இங்கு பார்க்கலாம்..

இயக்குனர் ராத மோகன்

மொழி, அபியும் நானும் போன்ற உணர்வு பூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து அட்டகாசமான காட்சியமைப்பை கொடுத்து வருபவர் இயக்குனர் ராதாமோகன். சிறந்த கதைகளில் சிறந்த நடிகர்களை பொருத்தி அதனை நேர்த்தியான படைப்பாக மக்களுக்கு கொடுக்கும் தேர்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் ராதா மோகன் திரைபயணத்தில் அவருடைய பொம்மை படம் தனி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா

பொதுவாகவே யுவன் இசையில் படம் என்றால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வரும் காரணம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் காதல் கதையில் சைகோ திரில்லர் திரைப்படமாக பொம்மை உருவாகியுள்ளதால் இப்படத்தின் பின்னணி இசையின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ப்ரியா பவானி ஷங்கர்

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் கச்சிதமாக நடித்து கொடுப்பவர் பிரியா பவானி ஷங்கர். அதன்படி இந்த படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக பொம்மை கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர் எடுத்து நடித்துள்ளார்.

எஸ் ஜே சூர்யா

எஸ் ஜே சூர்யா அவர்களின் நடிப்பு குறித்து வார்த்தைகளில் விவரிக்க முடியாது படத்திற்கு படம். கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரம் என்று சுவாரஸ்யம் கூட்டி கொண்டே செல்பவர். நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யபட வைப்பவர் எஸ்ஜே சூர்யா. அதன்படி வித்யாசமான கதைகொண்ட இந்த பொம்மை படத்தில் எஸ் ஜே சூர்யா மிகப்பெரிய அளவு கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பொம்மை

உளவியல் சிக்கல்களை உணர்வு பூர்வமாக கதையாக மாற்றி அவ்வபோது செய்தியில் வாசிக்கும் உண்மை நிகழ்வுகளை தழுவி பொம்மையை உயிருக்குஉயிராக காதலிக்கும் நபர் என்ற வித்யாசமான கதை தமிழ் சினிமாவிற்கு புதியது. உயிரோட்டான கதையை திரைப்படமாக கொடுத்து அசத்தும் ராதாமோகன் கனகட்சிதமாக கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் எஸ் ஜே சூர்யா இருவரது கூட்டணி இப்படத்திற்கு மிகபெரிய பலம். நிச்சயம் பொம்மை திரைப்படம் இந்த வாரத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.