சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புதிய புகைப்படங்கள் வெளியீடு,Sivakarthikeyan in maaveeran movie new stills out now | Galatta

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலிருந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய புகைப்படங்களை மாவீரன் படக் குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிமிக்ரி கலைஞராக தொலைக்காட்சியில் கலக்கி தொகுப்பாளராக வளர்ந்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக நுழைந்து தற்போது இன்றியமையாத நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  தனது ஒவ்வொரு படங்களும் அனைத்து வயதினருக்கும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்து பார்த்து கதாபாத்திரங்களையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் தான் மாவீரன்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்த நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக புதிய புகைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. மாவீரன் படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த புகைப்படங்கள் இன்னும் எதிர்பார்ப்புகளைக் கூட்டி இருக்கின்றன. மேலும் மாவீரன் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மீதான ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புதிய புகைப்படங்கள் இதோ…
 

#Maaveeran Ananda Vikatan HD Stills Without Watermark..!😇#Mahaveerudu #VeerameJeyam 💪🏼 pic.twitter.com/A2n7GxFhU1

— Shanthi Talkies (@ShanthiTalkies) June 15, 2023

சுந்தர்.Cயின் பக்கா ஆக்ஷனில் வரும் தலைநகரம் 2... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

சுந்தர்.Cயின் பக்கா ஆக்ஷனில் வரும் தலைநகரம் 2... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சினிமா

"பொம்மை"க்கு நம்பிக்கை கொடுத்த தனுஷின் சூப்பர் ஹிட் படம்!- 'இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு' என விவரித்த SJசூர்யா! வைரல் வீடியோ உள்ளே

சினிமா

"நடிப்பதைத் தாண்டி பொம்மை படத்தை தயாரிக்க காரணம் என்ன?"- முதல் முறை உண்மையை உடைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ