ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானாவின் LGM பட ரொமான்டிக் ட்ரீட்... MSதோனி தயாரிப்பில் முதல் படைப்பின் முதல் பாடல் இதோ!

MSதோனி தயாரிப்பில் வரும் LGM படத்தின் முதல் பாடலான சலனா வெளியீடு,Ms dhoni productions lgm movie first single salana song out now | Galatta

உலக அளவில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக உலக அளவில் பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் முதல் பாடலான சலனா பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் தெறிக்க விட்ட தோனி தற்போது திரையுலகில் தடம் பதிக்க எண்ணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது. அந்த வகையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படமாக உருவாகி வரும் LGM (Let's Get Married) படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் LGM (Let's Get Married) படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓமணப் பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பூ படத்தின் இயக்குனர் சசி இயக்கத்தில் ரொமான்டிக் திரைப்படமாக நடித்திருக்கும் நூறு கோடி வானவில், அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடித்துள்ள டீசல் மற்றும் நடிகர் “அட்டகத்தி” தினேஷ் உடன் இணைந்து நடித்து வரும் லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாணின் கைவசம் இருக்கின்றனர். ஷரிஷ் கல்யாணுடன் இணைந்து லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்த LGM திரைப்படத்தின் டீசர் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் LGM திரைப்படத்தின் முதல் பாடலாக சலனா எனும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது அந்த ரொமான்டிக்கான பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

சினிமா

"பொம்மை"க்கு நம்பிக்கை கொடுத்த தனுஷின் சூப்பர் ஹிட் படம்!- 'இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு' என விவரித்த SJசூர்யா! வைரல் வீடியோ உள்ளே

சினிமா

"நடிப்பதைத் தாண்டி பொம்மை படத்தை தயாரிக்க காரணம் என்ன?"- முதல் முறை உண்மையை உடைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும்
சினிமா

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும் "தீயே தாகமோ" பாடல் இதோ!