இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான அடங்காதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் இயக்குனர் சண்முகம் முத்து சாமி. தொடர்ந்து இவர் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான ‘பென்சில்’ படத்திற்கும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க.பெ ரணசிங்கம் படத்திற்கும் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அதை தொடர்ந்து ஹரிஷ் கல்யான் நடிப்பில் டீசல் என்ற படத்தை இயக்கினார். தமிழ் திரையுலகில் இளம் நாயகனாய் வலம் வரும் ஹரிஷ் கல்யான் கூட்டணியில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கிய டீசல் திரைப்படம் வடசென்னை கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் டீசல் திரைப்படம் இருந்து வருகிறது. திரைத்துறையில் தனித்துவமான திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் இயக்குனர் சண்முகம் முத்துசாமி பொதுவெளியில் சமூக பிரச்சனைகளை பேசி வருபவர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஈடுபாடுடன் இருக்கும் சண்முகம் முத்துசாமி சமீபத்தில் வீடியோ ஒன்றி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். புதுக்கோட்டை பூதக்குடி சுங்க சாவடி நோக்கி வந்துகொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை சாலை மிகவும் மோசமான நிலையிலும் குண்டு குழியுமாக இருந்துள்ளதால் இயக்குனர் சண்முகம் முத்துசாமி எரிச்சலடைந்துள்ளார். அந்த நேரத்தில் புதுகோட்டை அருகே பூதக்குடி சுங்கசாவடியில் ஊழியர் ஒருவர் இயக்குனர் சண்முகம் முத்துசாமி ஒட்டி வந்த காரை வழிமறித்து சுங்க வரி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் முத்துசாமி ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை உள்ள சாலைகள் மோசமான நிலையில் இருக்கிறது இதனால் வாகனங்களை இயக்க சிரமாக உள்ளது. இதை உங்களிடம் கூறினால் நெடுச்சாலை ஊழியரிடம் கூறுங்கள் என அலச்சியமாக பதில் சொல்கிறீர்கள். கட்டனம் சரியாக வசூலித்தால் மட்டும் போதாது சாலையையும் மேம்படுத்த வேண்டும் என்றார். பின் அங்கிருந்து கோவத்துடன் சென்றார்.

இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சண்முகம் முத்து சாமி பதிவிட்டு அதனுடன்,

“சுங்க கட்டணம் வசூல் பண்றது மட்டும் தான் எங்க வேலை.. ரோடு சரியில்லன்னா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கிட்ட கேளுங்கள்..! சாலைகள் மிக மோசமாக உள்ளது. நான் ஏன் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் மத்திய அமைச்சர் ஜேபிநட்டா அவர்களையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் சண்முகம் முத்துசாமியின் இந்த பதிவு ரசிகர்களால் வரவேற்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.