பிரபாஸ் மார்கெட்டை மேலும் உயர்த்தும் ஆதிபுருஷ்.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் நிலவரத்தை அறிவித்த படக்குழு..

மூன்றாவது நாளில் கோடிகளை குவிக்கும் ஆதிபுருஷ் விவரம் உள்ளே - Prabhas adipurush 3rd day collection | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் ரசிகர் வட்டம் இந்திய அளவு உயர்ந்தது. இப்படத்தையடுத்து பான் இந்திய ஸ்டாராகவும் அனைத்து மொழி ரசிகர்களினாலும் கொண்டாடப்படும் உச்சபட்ச நடிகராகவும் பிரபாஸ் வலம் வந்தார். அதை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் பெரிய பெரிய படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார். அதன்படி சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பிரபாஸ் நடித்து வந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான கடந்த இரண்டு படங்களும் பிரபாஸ் அவர்கள் நினைத்த அளவு கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தற்போது பிரபாஸ் கே ஜி எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கூட்டணி அமைத்து தற்போது ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் பிரபாஸ் நாடு முழுவதும் பல காலாமாக போற்றப்படும் இராமாயணம் இதிகாசத்தை தழுவி உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன்படி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ராமனாக நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் உருவானது. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து சீதா தேவியாக கீர்த்தி சனொன் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாடு முழுவதும் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளிலே ரூ 140 கோடி உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக உலகளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் மூன்றாவது நாள் வசூலை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி மூன்றாவது நாளில் ஆதிபுருஷ் திரைப்படம் ரூ 340 கோடி வசூல் செய்து மிகப்பெரிய அளவு பேசப்பட்டு வருகிறது. பாகுபலிக்கு பின் நாளுக்கு நாள் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் நூறு கோடி என்ற விகிதத்தில் வசூலை அதிகரித்து வருகிறது. இந்த தொடர் வசூல் வேட்டையையடுத்து பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவின் வசூல் அறிவிப்பை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Your love and encouragement is truly inspiring! Thank you for all the support ❤️ Jai Shri Ram 🙏

Book your tickets on: https://t.co/n21552WT86#Adipurush now in cinemas near you ✨#Prabhas @omraut #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #Pramod #Vamsipic.twitter.com/Hz7KzDJmJz

— UV Creations (@UV_Creations) June 19, 2023

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!
சினிமா

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!

ரியல் சார்பட்டா பரம்பரை கபிலன் மறைந்தார்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்கள்..
சினிமா

ரியல் சார்பட்டா பரம்பரை கபிலன் மறைந்தார்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்கள்..

பவா லக்ஷ்மணனை நெகிழ வைத்த KPY பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

பவா லக்ஷ்மணனை நெகிழ வைத்த KPY பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரல் வீடியோ உள்ளே..