உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!

இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து வெளியான அறிவிப்பு உள்ளே - Kamal haasan indian 2 Release Date check here | Galatta

தமிழ் சினிமாவின் தரத்தை காலத்திற்கு காலம் உயர்த்தி கொண்ட வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டமான சுவாரஸ்யத்தை கூட்டி கொண்டு தயாரிக்கும் ஷங்கர் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் ‘இந்தியன்’. கடந்த 1996ல் பிரம்மாண்டமாக வெளியாகி இந்திய திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்தியன் திரைப்படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதனுடன் விமர்சன ரீதியாகவும் தேசிய விருது உட்பட நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பல வருடம் கழித்து உலகநாயகன் கமல் ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் ஆவலுடன் இந்தியன் 2 படத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

அதன்படி லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியன் 2திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் பிரபலம் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மும்முரமாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் அசம்பாவித விபத்து ஏற்பட இந்தியன் 2  படமாக்கம் பாதியிலே நின்றது. அதன்பின்  தற்போது சிக்கல்கள் நீங்கி தற்போது இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக படமாகி வருகிறது. தற்போது லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.  

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகும் தகவலின் படி, இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் நிறைவடைய உள்ளதாகவும் இறுதிகட்ட வேலைகளை முடித்து இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த  தகவலையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் வெளியீட்டு குறித்த அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பின்பு எச் வினோத் கூட்டணியில் புது படத்திலும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் ஒருபடத்திலும் நடிக்கவிருக்கிறார். மேலும் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புரோஜக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை.. அப்பா ஆனார் RRR பட நாயகன் ராம் சரண்.. -  குவியும் வாழ்த்துகள்.!
சினிமா

11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை.. அப்பா ஆனார் RRR பட நாயகன் ராம் சரண்.. - குவியும் வாழ்த்துகள்.!

“சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வராமல் போன காரணம் இது தான்..” உண்மையை உடைத்த பசுபதி.. Exclusive Interview உள்ளே..
சினிமா

“சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வராமல் போன காரணம் இது தான்..” உண்மையை உடைத்த பசுபதி.. Exclusive Interview உள்ளே..

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!