“சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வராமல் போன காரணம் இது தான்..” உண்மையை உடைத்த பசுபதி.. Exclusive Interview உள்ளே..

சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் பசுபதி பகிர்ந்த தகவல் – Pasupathi about Sarpatta parambarai movie | Galatta

தென்னிந்திய நடிகர்களில் அனைத்து விதமான கதாபாதிரத்திற்கும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கனகச்சிதமான நடிகராக திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த நடிகர் பசுபதி. நாடக துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வருகை தந்த பசுபதி தொடக்கத்தில் வில்லனாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆரம்ப கால கட்டத்திலே உலகநாயகன் கமல் ஹாசன் உடன் கூட்டணி அமைத்து விருமாண்டி படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பார் பசுபதி. அதை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களில் படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார் பசுபதி. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி ஆர்யா ஹீரோவாக நடித்து வெளியான படம் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் பசுபதி ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இவரது கதாபாத்திரதிற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு வரவேற்பை அளித்து இன்று வரை அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. இவருடைய பெரும்பாலான கதாபாத்திரங்கள் தனித்துவமானது. எத்தனை காலம் ஆனாலும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்திருப்பது அதனாலே பசுபதி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் பசுபதி. தற்போது இவர் இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே கதையின் நாயகனாக பசுபதி நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘தண்டட்டி’  காவலராக கிராம பிரச்சனையில் மாட்டி தவிக்கும் கதைகளத்தில் உருவாகியிருக்கும் தண்டட்டி பட டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள தண்டட்டி திரைப்படம் வரும் ஜூன் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பசுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் தண்டட்டி படம் குறித்து படக்குழுவினருடன் நடிகர்கள் பசுபதி. ரோகினி உள்ளிட்டோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சார்பட்டா பரம்பரை படம் ஒடிடியில் வெளியான போது அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியிடம் அவரது மனநிலை குறித்து கேட்கையில்,

"அந்த படம் மக்களிடம் சேர்ந்தது. கொண்டாடப்பட்டது. என்னை பொறுத்தவரை திரையரங்க அனுபவம் என்பது வீட்டில் பாக்கும் மனோநிலையை தாண்டி வேறு மாதிரியான அனுபவத்தை தருகிறது. அங்கு ஆயிரம் பேர் வித்யாசமான உணர்வுகளோடு வருவார்கள். அந்த கலவையான உணர்வோடு பார்க்கும்போது அந்த நிகழ்வே வேறு மாதிரியாக இருக்கும்.

படம் பார்க்கும் போது பக்கத்தில் இருப்பவனின் ஆர்வம் உங்களை சேர்ந்து நீங்களும்  அந்த படத்தினுள் சென்று விடுவீர்கள். அது ஒரு அனுபவம். அந்த அனுபவம் சில படங்களிலே இருக்கும். உதாரணமாக சார்பட்டா பரம்பரை போன்ற படம் ஒரு மாஸ் என்டர்டெயினர் படம். அதை பெரிய கூட்டத்தோடு போய் பார்த்தா கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கும். இது போன்ற விஷயங்கள் ஓடிடி யில் கிடைப்பது குறைவு.

சார்பட்டா பரம்பரை படம் தியேட்டர் ரிலீஸுக்கு தான் யோசிச்சோம். அந்த நேரம் கொரோனா 3வது அலை வரும் னு அறிவிச்சாங்க.. தயாரிப்பாளர் பணம் போட்ருக்காரு.. அவர் வட்டி கட்றாரு. இன்னும் 2 வருஷம் இப்படி இழுத்தா அவர் என்ன பண்ணுவார் அதான் ஓடிடி படம்." என்றார் நடிகர் பசுபதி.

மேலும் தண்டட்டி படக்குழுவினர் கலந்து கொண்டு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!
சினிமா

“விஜய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்.. ஆனால் அரசியல் வருகை..” கல்வி விருது விழா குறித்து கருத்து தெரிவித்த சத்யராஜ்..!

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..”  சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..
சினிமா

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!
சினிமா

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!