உலகநாயகன் கமல் ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘இந்தியன் 2’.. - காஜல் அகர்வால் பகிர்ந்த அட்டகாசமான தகவல்..!

இந்தியன் 2 குறித்து பேசிய காஜல் அகர்வால் உற்சாகத்தில் ரசிகர்கள் விவரம் உள்ளே - Actresss Kajal Aggarwal about Indian 2 movie | Galatta

கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘இந்தியன்’ உலக நாயகன் கமல் ஹாசன் வித்யாசமான முயற்சியில் இந்திய திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்திய இந்தியன் திரைப்படம் தேசிய விருதுகளுடன் நாடு முழுவதும் வரவேற்கபட்டது. இந்நிலையில் பல ஆண்டு காலம் கழித்து இயக்குனர் ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

லைகா தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைபடத்தின் படபிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 படம் பாதியிலே நின்றது. அதன்பின் சிக்கல்கள் நீங்கி தற்போது இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக படமாகி வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் பிரபலம் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இபடத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.  

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியின் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்து பொங்கல் வெளியீட்டாக உலகளவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் இந்தியன் 2 படம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியன் 2 படம் குறித்து கேட்கையில், அவர், “நான் இது போன்ற கதாபாத்திரம் இதுவரை ஏற்று நடித்ததில்லை. நம்புங்கள் இந்தியன் 2 படம் நிச்சயம் ஒரு வித்யாசமான படமாக இருக்கும். இது பொதுவாக சொல்லும் வார்த்தைள் அல்ல. நிச்சயம் படம் உண்மையாக வித்யாசமாக இருக்கும். மற்றபடி படம் குறித்து ஏதும் சொல்ல முடியாது. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள்..” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டருக்கு பின் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வரும் கமல் ஹாசன் இப்படத்தையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘KH234’ என்ற பெயரில் அமையும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாததிற்கு பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசன் இயக்குனர் எச் வினோத் உடன் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..”  சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..
சினிமா

“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!
சினிமா

கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!

ரியல் சார்பட்டா பரம்பரை கபிலன் மறைந்தார்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்கள்..
சினிமா

ரியல் சார்பட்டா பரம்பரை கபிலன் மறைந்தார்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்கள்..