படத்திற்கு படம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் தனுஷ். அசாரதரமான நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் ஐகானாக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ், கமர்ஷியல் சினிமா ஒருபுறம் எதார்த்த திரைப்படங்கள் ஒருபுறம் என ஒவ்வொரு படத்திற்கும் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெருமைப்பட வைத்து வருகிறார் நடிகர் தனுஷ். நடிகர் என்று மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதையாசிரியர், பாடகர் என்று பன்முக திறனுடன் வலம் வரும் தனுஷ் அவர்களுக்கு கலாட்டா குழுமம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்..

தனுஷ் அவர்களின் 39 வது பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் பட டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. எதிர்பார்ப்பை நாளுக்கு னால் அதிகரித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்பட டீசர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வெளியான அட்டகாசமான டீசரில் ரசிகர்களை சிலிர்க்க வைத்த முக்கிய தருணங்கள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை..

தனுஷ் என்ட்ரி..

தனுஷ் படங்களில் மாஸ் என்ட்ரி என்றாலே சிறப்பாக அமையும். காலம் தொட்டே ஹீரோக்களுக்கு மாஸ் என்ட்ரி படங்களில் இருந்தாலும் அதில் தனுஷ் படங்களில் வரும் என்ட்ரி அந்த படத்தின் கதை திருப்பத்திற்கு பலமாக அமையும். அதன்படி மரியான், ஜகமே தந்திரம் வடசென்னை, அசுரன், க்ரே மேன்,கர்ணன், நானே வருவேன் ஆகிய படங்களில் வரும் என்ட்ரி சமீப காலமாக ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டவை. அந்த வரிசையில் கேப்டன் மில்லர் டீசரி போர் காளத்தில் துப்பாக்கியை ஏந்தி வரும் தனுஷ் என்ட்ரி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படங்களில் திரைப்படங்களின் அழகியலுக்கு மீறிய வன்முறைகள் இடம் பெறுவது வழக்கம். அவருடைய முந்தைய படங்களான ராக்கி, சாணி காகிதம் படங்களின் உச்சகட்ட வன்முறையை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்திலும் வந்துள்ளது. போர் களத்தில் பிரிட்டிஷ் காவலர்களுக்கு தனுஷ் கூட்டணி மக்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில் அருண் மாதேஸ்வரன் டச் இருக்கத்தான் செய்கிறது.

சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன்

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான சிவாராஜ் குமாரின் முதல் தமிழ் திரைப்படமாக அமைந்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். குதிரையில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவராஜ் குமார் காட்சி தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் டீசரில் வரும் இரண்டு இடங்களிலும் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். திரைப்படங்களில் அப்பாவி பெண்ணாக மட்டுமே பார்த்து வந்த பிரியங்கா மோகன் துப்பாக்கியை ஏந்தி சண்டையிடுவது சர்ப்ரைஸ்..

மற்ற நடிகர்கள்

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் திருப்பங்கள் கொண்டு வரும் வகையில் முக்கிய கதாபாத்திரங்களில் இளங்கோ குமாரவேல், நிவேதிதா, ஜான் கொக்கன் ஆகியோர் நடித்துள்ளார். இவர்கள் வரும் காட்சிகள் டீசரில் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசை

தனுஷ் – ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணியில் ஆறாவது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கேப்டன் மில்லர் டீசரின் பின்னணி இசை அமைந்துள்ளது. டீசருக்கு மிகப்பெரிய பலமாக ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைந்துள்ளது.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.