மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

Chiranjeevi in bholaa shankar movie trailer out now vedhalam remake | Galatta

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தொடர்ந்து தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள். கடைசியாக இவரது நடிப்பில் கடந்த (2022) ஆண்டில் ஆச்சாரியா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கான மிகப்பெரிய வெற்றியை பெற தவறியது. இருப்பினும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் வெளியீடாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. 

அடுத்தடுத்து மாஸ் வெற்றி படங்களை கொடுக்கும் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் இன்னும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் போலா ஷங்கர். தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தின் நேரடி தெலுங்கு ரீமேக்காக போலா ஷங்கர் திரைப்படம் தயாராகி இருக்கிறது. கதையின் நாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக தமன்னா நடித்திருக்கிறார். 

மேலும் ரகு பாபு, முரளி ஷர்மா, ரவிசங்கர், வெண்ணலா கிஷோர், கிஷாந்த், துளசி, ஸ்ரீமுகி, சத்யா, ரஷ்மி கௌதம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஏ கே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கிரியேட்டிவ் கமர்சியல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய மார்த்தாண்ட் . கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மகதி ஸ்வரா சாகர் இசையமைத்து இருக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த போலா ஷங்கர் திரைப்படத்தின் டீசரும் முதல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் இந்த போலா ஷங்கர் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் போலா ஷங்கர் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இதோ…
 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!
சினிமா

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜெயிலர் பட மரண மாஸ் ட்ரீட்... ரசிகர்களை கவரும் ஜுஜுபி பாடல் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜெயிலர் பட மரண மாஸ் ட்ரீட்... ரசிகர்களை கவரும் ஜுஜுபி பாடல் இதோ!