"கொளுத்தி போடு டப்பாஸ!"- சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் மாவீரன் பட கலக்கலான சீனா சீனா பாடலின் UNCUT வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட சீனா சீனா UNCUT வீடியோ வெளியீடு,Sivakarthikeyan in maaveeran movie scene ah scene ah video song out now | Galatta

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்திலிருந்து சீனா சீனா பாடலின் UNCUT வீடியோ வெளியானது. தொலைக்காட்சிகளில் மிமிக்ரி கலைஞராகவும் தொகுப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கி பின்னர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களின் பட்டியலில் இணைந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும்படியான தரமான படைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு விதமான கதைக்களங்களில் உருவாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு அப்படங்களுக்காக காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர்.முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வந்த திரைப்படங்களில் இருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமான ஃபேண்டஸி திரைப்படம் ஆக வெளிவந்த ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் தான் திரைப்படம் தான் மாவீரன். யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வரும் மாவீரன் திரைப்படம் தற்போது வரை 75 கோடிக்கும் மேல் வசூல் இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக சீனா சீனா என்ற பாடலின் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது இந்த வீடியோ படத்தில் வராத காட்சிகளோடு அமைந்த UNCUT வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சீனா சீனா வீடியோ பாடல் இதோ…
 

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!
சினிமா

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!
சினிமா

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!