தென்னிந்திய திரை உலகின் முக்கிய நடிகையாக உயர்ந்து நிற்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பலவிதமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் வெளிவந்த திட்டம் இரண்டு மற்றும் பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மோகன்தாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக்காக அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். RDC மீடியா சார்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீள் சௌத்ரி இணைந்து தயாரிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை பிரபல குமார் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சன்ட் இசையமைத்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு சர்ப்ரைஸாக தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…

Happy to release the first look of #TheGreatIndianKitchen, produced by @RDCMediaPvtLtd starring @aishu_dil & Directed by @Dir_kannanR

Best wishes to the entire team 💪💪👍@23_rahulr @balasubramaniem @jerrysvincent @leojohnpaultw @johnsoncinepro @digitallynow #NewYear2022 pic.twitter.com/7VPFhdEjzI

— Arya (@arya_offl) January 1, 2022