தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சதீஷ், முன்னணி நட்சத்திர நடிகர்களோடு அனைவருடனும் இணைந்து காமெடியில் கலக்கி வருகிறார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன்சிங் கதாநாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் ஆகிய திரைப்படங்கள் சதீஷ் நடிப்பில் வெளியானது.

நகைச்சுவை நடிகராக அசத்திய சதீஷ் முதல் முறை அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாய் சேகர் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் மனோபாலா, லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் சந்திரபோஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாய் சேகர் திரைப்படத்தை பிரபல நடிகரான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். அஜீஷ் இசையில், பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி சமீபத்தில் வெளியான எடக்கு மடக்கு என்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் புத்தாண்டு பரிசாக சதீஷ் மற்றும் பவித்ரா இணைந்து நடித்துள்ள நாய் சேகர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டீசர் இதோ…