மலையாளத் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்பவர் நடிகர் மோகன்லால். அடுத்ததாக த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் படத்தில் நடித்து வரும் மோகன்லால் அடுத்து நடிக்கும் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் திரைப்படத்தின் மூலம் முதல் முறை இயக்குனராகவும் களமிறங்குகிறார்.

தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர், அலோன், 12th man உள்ளிட்ட திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அடுத்தடுத்து வரிசையாக வெளிவரவுள்ளன. முன்னதாக பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் ப்ரோ டாடி.

பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள ப்ரோ டாடி திரைப்படத்தில் மோகன்லால் & பிரித்திவிராஜுவுடன் இணைந்து மீனா, கல்யாணி பிரியதர்ஷன், உன்னி முகுந்தன், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், தீபக் தேவ் இசையமைத்துள்ளார். 

கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியுள்ள ப்ரோ டாடி  திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ரோ டாடி திரைப்படத்தின் கலக்கலான டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…