தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதைகளத்தில் அட்டகாசமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஹீரோக்களில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பின் தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் கூடத்தை உருவாக்கினார். தற்போது சிவா ‘காசேதான் கடவுளடா’, ‘சலூன், ‘கோல்மால்’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வெளிவரவுள்ளது. இந்த வரிசையில் தற்போது மிர்ச்சி சிவா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ இயக்குனர் விக்னேஷ் ஷா.PN இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிர்சி சிவா உடன் இணைந்து மேகா ஆகாஷ்,அஞ்சுக்குரியன், மா கா பா ஆனந்த், பாடகர் மனோ, ஷாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளுடன் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படம் தமிழகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், ஷா ரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த படத்தில் சிவாவிற்கு அப்பாவாக மனோ நடித்தது குறித்து கேள்வி கேட்கையில், இயக்குனர் விக்னேஷ் கூறியது, “இந்த கதாபாத்திரம் மனோ சார் பண்ணா நல்லாருக்கும் னு நினைச்சோம். ஆனால் அவர் இத பண்ணுவாரா னு ஒரு யோசனை இருந்தது. சரி னு அவரை நேரில் சந்தித்து இது குறித்து பேசினோம்.. அவர் யார் ஹீரோ வா நடிக்கராரு னு கேட்டாரு. நான் சிவா சார் னு சொன்னேன். அதற்கு அவர் நான் அவருடைய பெரிய ரசிகர். எனக்கு அவருடைய படங்கள் னா ரொம்ப பிடிக்கும் என்றார். பின் கதையை கேட்டு பண்ணலாம் னு சொன்னாரு. அவர் சிங்கார வேலன் படத்திலே நல்லா நடிச்சிருப்பாரு. அது போல இந்த படத்திலும் நல்லா நடிச்சிருக்காரு..” என்றார்.

அதை தொடர்ந்து சிவா, "மனோ சார் என்றாலே ஒரு மகிழ்ச்சி எனலாம். அவரை சுற்றி உள்ள மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். ஒரு காட்சியில் காலை காட்சியில் நடிப்பதை விட்டுவிட்டு அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் பாடுவதை கேட்டுட்டு இருந்தேன்.தொடர்ந்து நான் நிறைய பாடல்களை பாட சொல்லி கேட்பேன். அவரும் சலிக்காமல் அதை பாடுவார். இப்படி கொடுமைபடுத்தினேன். அவர் என்னை பழிவாங்குவது போல் அவரது வீட்டிலிருந்து வகைவகையா சாப்பாடு கொண்டு வருவார். காலையில் படப்படிப்பிற்கு வந்ததும் இன்னிக்கு என்ன சாப்பாடு தெரியுமா? என்று தான் ஆரம்பிப்பார். இதற்காகவே நான் இந்த படத்தில் அவரை விட்டுவிட கூடாது எல்லா தயாரிப்பாளரிடமும் மனோ சார் நல்லா பன்றாருனு சொல்லி வரேன்" என்று நகைச்சுவையாக பேசினார்.

மேலும் படத்திற்கு ஏன் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் என்று பெயர் என்ற கேள்விக்கு, மிர்ச்சி சிவா, "எல்லாமே 'S' ல வரனும் னு வெச்சிருக்காங்க.. நடுவுல தயாரிப்பாளரோடு பேசும்போது பேர் ரொம்ப பெருசா இருக்கு.. 'சிங்கிள் சங்கர்' இல்லனா 'ஸ்மார்ட் போன் சிம்ரன்' னு வெச்சிக்கலாமா னு கேட்டாரு.. அதன் பிறகு இப்போ இருக்க பார்வையாளர்களுக்கு புரியும் னு சொல்லி அப்பறம் முழுசா வெச்சிட்டோம்." என்று குறிப்பிட்டார்.

மேலும் படக்குழுவினர் படம் குறித்து கலகலப்பாக பல சுவாரஸ்யமாக பல தகவல்களை பகிர்ந்த முழு வீடியோ இதோ..