“எனக்கு Inspiration ராஜமௌலி தான்..” மணிரத்தினம் அளித்த அட்டகாசமான பதில் - ஆச்சரியத்தில் உறைந்த ராஜமௌலி.. விவரம் இதோ..

பாகுபலியை புகழ்ந்த மணிரத்தினம் விவரம் இதோ.. - Director Mani Ratnam Praises Rajamoulis Bahubali film | Galatta

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் மணிரத்தினம் 1983 கன்னடத்தில் 'பல்லவி அனுபல்லவி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் அடுத்த ஆண்டு மலையாளத்தில் ‘உணரு படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து 1985 ல் பகல் நிலவு படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார் மணிரத்தினம். மூன்று திரைத்துறையிலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய கவனம் பெற்றார் இயக்குனர் மணிரத்தினம். அதனை தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை இயக்கி தமிழில் இருந்த  இயக்குனர்களுகெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தார். ரஜினி காந்த் , கமல் ஹாசன், விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைபயனத்தில் அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் சாம்ராஜ்ஜியத்தை கொடுத்தவர். பின் 90 களில் மணிரத்தினம் ஆட்டம் வெறித்தனமாக இருக்க. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து பிரம்மிக்க வைத்தார். ஷாருக் கான் நடிப்பில் பாலிவுட்டில்  காலடி எடுத்து வைத்தார். ‘தில்சே திரைப்படம் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. அதன்பின் தமிழ், இந்தி என பல மொழிகளில் கவனம் ஈர்த்து இன்று இந்திய சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனராகவும் திரை ஜாம்பவனாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் கவனம் பெற்று வெற்றி பெற்றது. வரும் ஏப்ரல் மாதம் 'பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்' வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் தென்னிந்திய சிறந்த இயக்குனர்களான மணிரத்தினம், எஸ் எஸ் ராஜமௌலி மற்றும் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இவர் மூவரும் சினிமாவின் எதிர்கால போக்கு குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த கலந்துரையாடலின் நடிவராக தொகுத்து வழங்க பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்

இதில் இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம்,  'பாசிட்டிவ் முறையில் பெரிய தாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திய ஒன்று எது?’ என்று கேட்டதற்கு,

அவர்  "அது ராஜமெளலி தான்.. பல வருடங்களாக நான் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதை எடுக்க எனக்கு வழி தெரியாமல் இருந்தேன். அதன் பின் பாகுபலி திரைப்படம் வந்தது. அது மிகப்பெரிய பிரம்மாண்டமான படைப்பு இரண்டு பாகங்களாக வெளியானது.  உங்களால் ஒரு கதையை இரண்டு பாகங்களாக சொல்ல முடிந்தது. அது பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது.  இந்த விஷயம் தான் எனக்கு பொன்னியின் செல்வன் எடுக்க உதவியது. ஒருவேளை பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளிவராமல் இருந்திருந்தால் நான் பொன்னியின் செல்வன் படம் எடுத்திருக்க மாட்டேன். நன்றி ராஜமௌலி" என்றார்.

அதற்கு ராஜமௌலி , "சார் இதுதான்  நான் இதுவரை பெற்றதில் மிகப்பெரிய பாராட்டு இது.”  என்றார்.

பொன்னியின் செல்வன் நாவல் தமிழில் ஐந்து பாகங்களாக எழுதப்பட்ட தலைசிறந்த நாவல். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையில் திரைப்படமாக உருவாக்க புரட்சி திலகம் எம் ஜி ஆர் முதல் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் பலர் முயன்றனர். ஆனால் படமாக்க தேவைப்படும் பொருட்செலவு, திரைக்கதை அமைக்கும் முறை என்று பல வழிகளில் கைக்கொடுக்காமல் இருந்தது. இந்த நாவலை படமாக்க வேண்டும் என்று கனவாக கொண்டு இருந்த மணிரத்தினம் இப்படத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து திரைதுறையின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவு எகிறியது. நீண்ட முயற்சிக்கு பின் நாவலை சுருக்கி இரண்டு பாகங்களாக திரைக்கதை அமைத்து முதல் பாகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டார் இயக்குனர் மணிரத்தினம். லைகா தயாரிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் உலகளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனியில் ஏற்பட்ட விபத்து.. என்ன நடந்தது? - சம்பவம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. வீடியோ இதோ..
சினிமா

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனியில் ஏற்பட்ட விபத்து.. என்ன நடந்தது? - சம்பவம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. வீடியோ இதோ..

“அடியாத்தி இது என்ன Feel uh..” தனுஷ் version ல் வெளியானது வா வாத்தி.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

“அடியாத்தி இது என்ன Feel uh..” தனுஷ் version ல் வெளியானது வா வாத்தி.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல் இதோ..

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..  - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..
சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..