துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..

வாரிசு துணிவு 50 வது நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த ரோகிணி திரையரங்கம் - Rohini Theatre plan to fans celebrate Thunivu varisu 50th day | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படங்கள் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘துணிவு’ மற்றும் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு . 9 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் இரு துருவ உச்சபட்ச நடிகர்களின் திரைப்படம் வெளியாவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இரு படங்களுக்கும் மிகபெரிய அளவு கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் வரவேற்பை அளித்தனர். இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக இரு படங்களுக்கு மிக பெரிய ஆதரவை அளித்தனர். இந்நிலையில் வெற்றிகரமாக பல இடங்களில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் 50 வது நாட்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றது. இதைக் கருத்தில் கொண்டு பல இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் விஜய் அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கம் துணிவு மற்றும் வாரிசு ஆகிய வெற்றிப்படங்களின் 50 நாள் நிறைவையொட்டி ரசிகர்களுக்காக கொண்டாட்ட நிகழ்வினை நடத்தவுள்ளது. வரும் பிப்ரவரி 25 ம் தேதி மாலை 7 மணி முதல் ரோகிணி திரையரங்க வளாகத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வெளியான துணிவு படத்தின் 50 நாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

Save the date!!

It's time to celebrate 50 Days of Megahit #Thunivu at #FansFortRohini

Book now--> https://t.co/DR1idqcjFs#Ajithkumar #HVinoth @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandra #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/PkCxqq9TnR

— Rohini SilverScreens (@RohiniSilverScr) February 22, 2023

மற்றும் வரும் பிப்ரவரி 26 ம் தேதி காலை 11 மணி முதல் ரோகிணி திரையரங்க வளாகத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தாயரிப்பில் தளபதி விஜய் நடித்து வெளியான வாரிசு படத்தின் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

Get ready #Thalapathy bloods lets celebrate 50 Days of Blockbuster #Varisu at #FansFortRohini

Book now --> https://t.co/DBraJKFJza@actorvijay @directorvamshi @iamRashmika @7screenstudio pic.twitter.com/l8HBW3GGcR

— Rohini SilverScreens (@RohiniSilverScr) February 22, 2023

இதனை ரோகிணி திரையரங்கம் தனது சமூக ஊடங்கங்களில் பகிர்ந்துள்ளது. இதனையடுத்து விஜய் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் அப்பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். ரோகிணி திரையரங்கம், உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற திரையரங்குகளில் மிகமுக்கியமான  திரையரங்கம். ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டங்களுடன் அரங்கம் அதிர கொண்டாட்டத்தில் குதூகலிக்க ரசிகர்களுக்கு பொருத்தமான இடமாக சென்னை ரோகிணி திரையரங்கம் இதுவரை இருந்து வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் படம் பார்க்கவே ரசிகர்களோடு பல நட்சத்திரங்களும் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக ரோகிணி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி சிறப்பம்சம் வாய்ந்தது. ஆட்டம் பாட்டம் என்று ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் அளவு இருக்கும் என்றால் அது மிகையாகாது.

இந்த கொண்டாட்டம் எல்லா உச்சநட்சத்திரத்திற்கும் பொருந்தும். ஆனால் விஜய் அஜித் படங்கள் தனி சிறப்பு வாய்ந்தது எனலாம். துணிவு , வாரிசு திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி ரோகணியில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். அது சார்ந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலைய்ல் இரு படங்களுக்கும் 50 வது நாள் கொண்டாட்டம் நிச்சயம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 ரூபாய் சில்லறைக்கு 2000 ரூபாய் அபராதம்.. - தளபதி விஜயின் ‘தமிழன்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பீடு.. விவரம் இதோ..
சினிமா

1 ரூபாய் சில்லறைக்கு 2000 ரூபாய் அபராதம்.. - தளபதி விஜயின் ‘தமிழன்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பீடு.. விவரம் இதோ..

மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்.. கண்ணீர் விட்டு அழுத சிவமணி.. - முழு வீடியோ இதோ..
சினிமா

மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்.. கண்ணீர் விட்டு அழுத சிவமணி.. - முழு வீடியோ இதோ..

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான  Surprise Gift.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான Surprise Gift.. வைரல் பதிவு இதோ..