“எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதத்தை நாங்கள் கண்டிப்பாக பயன்படுத்துவோம்” என்று, உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியா - உக்ரைன் போர் இன்று 28 வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யா தனது மொத்த பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைன் மீது மிக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

இந்த நிலையில், “உக்ரைனில் மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை  ரஷ்யா வீசி வருவதாக” பீதியை கிளப்பும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

அத்துடன், “மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை ரஷ்யா வீசுவது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகி” இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, “உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியு போல் நகரத்தை நோக்கி இந்த மாதிரியான குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் தரையில் உள்ள புற்களும் கூட பற்றி எரிந்து வருவதாகவும்” அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

“இப்படியாக, மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள், மற்ற குண்டுகளை விட மிக மிக ஆபத்தானவை” என்றும், விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, “உக்ரைனில் ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம்” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைய தினம் மிக கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், உக்ரைன் மீது  போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது உலகையே மிரட்டும் வகையில், அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

எனினும், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையான தொடர்ச்சியாக  நீடித்து வருகிறது.

“இரு நாடுகளுக்குள்ம் இடையேயான இந்த போர், புதிதாக 3 ஆம் உலகக்போருக்கு வழி வகுக்கும்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால், “இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துமோ?” என்கிற புதிய அச்சமும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தான், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று அங்குள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பேசினார். அப்போது, அவரிடம் அணு ஆயுதம் குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், “உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது” என்று, குறிப்பிட்டார்.

குறிப்பாக, “அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள்” என்று குறிப்பிட்ட அவர், “ரஷ்யா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்ச பட்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம்” என்றும், வெளிப்படையாகவே மற்ற உலக நாடுகளுக்கு அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இதனால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடும் பீதியில் உரைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.