2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.நிவின் பாலி,சாய் பல்லவி,அனுபமா,மடோனா என்று பல பிரபலங்களை நட்சத்திரங்களாக மாற்றிய படம்.

சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.இத்தகைய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கடந்த சில வருடங்களாக வேறு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்,கடந்த வருட இறுதியில் கோல்ட் என்ற படத்தினை அடுத்து இயக்குவதாக ரசிகர்களிடம் தெரிவித்தார்.

இந்த படத்தினை ப்ரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அஜ்மல் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ப்ரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.