ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக 737 விமானம் மலைப் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்த 133 பேரின் நிலைமை என்னவாயிற்று என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங் சோ வுக்கு 133 பேருடன் சென்ற விமானம் தான், அந்நாட்டில் ஒரு பயங்கர விபத்தில் சிக்கி உள்ளது.

அதாவது, சீனா நாட்டில் உள்ள குன்மிங் பகுதியில் இருந்து குவாங் சோ நோக்கி சென்ற பயணிகள் விமானம், அந்நாட்டில் உள்ள ஒரு மலை பகுதியில் எதிர்பாரத விதமாக கீழே விழுந்து பெரும் விபத்தில் சிக்கி உள்ளது. 

அதுவும், கிட்டதட்ட 8,400 அடி உயரத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்த இந்த விமானம், 183 அடி உயர்த்தில் இருந்து அங்குள்ள மலை பகுதியில் கீழே விழுந்து நொருங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பிட்ட இந்த மலை பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் “மொத்தம் 133 பேர் பயணித்து உள்ளனர் என்றும், ஆனால் இந்த 133 பயணிகளின் நிலை என்னவாயிற்று?” என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

குறிப்பாக, மலைப் பகுதியில் விமானம் விழுந்த நொருங்கிய இடத்தை சுற்றியிலும், தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது என்றும், அந்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த எந்த விவரமும் இது வரை தெரியவில்லை என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மேலும், விமான விபத்து நடைபெற்ற மலைப்பகுதிக்கு மீட்பு படையினர், தீயணைப்பு வீரகள், மலையேற்ற குழுவினர் என்று, பல்வேறு மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து சென்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், இந்த விமானம் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களில் அந்த விமானத்தில் இருந்து மொத்த தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், முதற்கட்ட தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

அதாவது, சீனாவில் செயல்பட்டு வரும் ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்தில் போயிங் 737, 737 மேக்ஸ் என 2 பிரிவுகளாக விமானங்கள் உள்ளன. 

இவற்றில், 737 மேக்ஸ் வகை விமானங்கள் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளில் தொடர்ந்து சிக்கி பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது. 

அதற்கு முந்தைய கண்டுபிடிப்பான போயிங் 737 விமானத்தில், பெரிய அளவில் கோளாறுகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்கிற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்தும், தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Videos of Chinese plane crash as tweeted by Chinese state media. 132 people were on board. pic.twitter.com/4d6ihH76C9

— DD News (@DDNewslive) March 21, 2022