உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷியா குறிவைத்து உள்ளதால், “உக்ரைன் ராணுவத்தை வைத்தே அவரை தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக” தகவல்கள் வெளியாகி, உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளன.

ரஷ்யாவின் படையெடுப்பால், உக்ரைன் மிக பெரிய உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த போரால், உக்ரைன் நாட்டில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு, அந்நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

உக்ரைன் நாட்டை பல முனைகளில் இருந்தும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் உக்ரைன் நாட்டின் பல இடங்களிலும் எங்கு பார்த்தாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்து புகை மண்டலங்களாக காட்சி அளிக்கின்றன.

இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்து லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு உலக தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளதால், அந்நாட்டு பல்வேறு விதமான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இதனால்,  உக்ரைன் மீதான போரை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ரஷியா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தான், “உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கியை, அந்நாட்டு ராணுவமே எதிர்க்க வேண்டும்” என்று, ரஷிய அதிபர் புதின் கோரிக்கை விடுத்து உள்ளார்.

அதன் படி, “உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியை அந்நாட்டு ராணுவமே எதிர்த்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டும்” என்று, ரஷியா அதிபர் புதின் கோரிக்கை விடுத்து உள்ளார். 

இது குறித்து, ரஷிய அதிபர் புதின் வைத்து உள்ள கோரிக்கையில், “உக்ரைன் அரசை உக்ரைன் ராணுவம் கவிழ்க்க வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான தொலைக்காட்சி சந்திப்பின் போது, பேசிய விளாடிமர் புதின், “உங்கள் நாட்டை ஒரு நியோ நாசி ஆண்டு கொண்டு இருக்கிறார். அவர் உக்ரைன் வலதுசாரி. அவரை ஆதரிக்காதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளை நாசம் செய்து விடுவார்கள். உங்கள் வீட்டு பெண்கள், முதியவர்களை அவர்களால் காப்பாற்ற முடியாது. அதனால், ராணுவமே அங்கு ஆட்சியை கைப்பற்றி, அரசை கவிழ்க்க வேண்டும். உங்கள் கையில் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று, கூறியுள்ளார்.

மேலும், “அங்கு ராணுவ ஆட்சி நடந்தால் ரஷிய அரசு பேச்சு வார்த்தை நடத்தும் என்றும், நாம் ஒரு விதமான ஒப்பந்தத்திற்கும் வர முடியும்” என்றும், அவர் ஆசை வார்த்தை காட்டி உள்ளார்.

“உக்ரைனில் இருக்கும் ரஷிய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், அவர்கள் மிகவும் தைரியமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும், ரஷியாவின் உயர் மட்ட கமிட்டியை நாங்கள் உக்ரைனுக்குள் அனுப்ப தயார்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “ உக்ரைனுடன் பேச நாங்கள் தயார் என்றும், ஆனால் உக்ரைன் அரசு எங்களிடம் பேசுமா என்று தெரியாது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “உக்ரைனில் ராணுவ ஆட்சி நடந்தால் பேச்சு வார்த்தை நடத்த, ஒப்பந்தம் செய்ய வசதியாக இருக்கும்” என்றும் புடின் பேசி உள்ளார்.

இப்படியாக, “உக்ரைன் அரசை கவிழ்த்து அந்நாட்டு அதிபர் சொலென்ஸ்கியை அந்நாட்டு ராணுவத்தை வைத்தே கொலை செய்ய புதின் திட்டமிட்டு உள்ளார் என்றும்,. உக்ரைன் ராணுவம் - அரசு இடையே பிரிவினையை ஏற்படுத்த புதின் திட்டம் போட்டு இருக்கிறார்” என்றும், தகவல்கள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பல்வேறு உலகத் தலைவர்கள், “ரஷ்யா அதிபர் விளாடிமர் புதினின் பேச்சுக்கு உக்ரைன் ராணுவம் அடி பணிந்தால், இது பெரிய பாதிப்பில் முடியும்” என்றும், எச்சரித்து உள்ளனர்.

“ஏற்கனவே, உக்ரைனில் உள்ளே ரஷியாவின் உளவாளிகள் உள்ளனர் என்றும், அவர்கள் ஆட்சியை கவிழ்க்க உள்ளே இருந்து முயன்று வருகிறார்கள் என்றும், ராணுவத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளே இருந்து ஆட்சியை கவிழ்த்து, அதன் பிறகு உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ரஷியா கொண்டு வரும்” என்றும், பலரும் எச்சரித்து உள்ளனர். 

“அல்லது பொம்மை அரசை அங்கு ரஷியா நிறுவும் என்பதை மறக்க வேண்டாம்” என்றும், பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷியா குறிவைத்து உள்ளதால், “உக்ரைன் ராணுவத்தை வைத்தே அவரை தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக” வெளியாகி உள்ள தகவல்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.