உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வசித்து வருகின்றனர். மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ukraine students

உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்நிலையில் நேற்று அதிகாலையில் ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து தங்களின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் நான் பெற்றுவருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும். உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதால், அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர் . உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.. அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், டெல்லிக்கு திரும்பி வந்து விட்டது.

மேலும்  உக்காரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக  மீட்க மத்திய அரசு  முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது .  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்களை இயக்கப்பட உள்ளதாகவும்,  ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் வழியாக இந்தியர்களை மீட்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.