ரஷ்யாவின் பீரங்கிகள் அணி வகுத்து வருவதைக் கண்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தனி ஒருவன், அதனை தடுத்து நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பால், உக்ரைன் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், உக்ரைன் நாட்டின் உயிர் சேதம் மற்றும் அந்நாட்டின் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் நாட்டை பல முனைகளில் இருந்தும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் உக்ரைன் நாட்டின் பல இடங்களிலும் எங்கு பார்த்தாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்து மேக மூட்டங்களாக காட்சி அளிக்கின்றன.

இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்து லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதுவும், அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், “எங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படை எடுப்பை கண்டித்து அந்நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக” சென்றனர். 

முக்கியமாக, ரஷ்யாவை கண்டித்தும், உக்ரைன் நாட்டின் மீதான இந்த போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திபடியே, அர்ஜென்டினாவில் ஏராளமான மக்கள் பேரணியாக சென்றனர்.

அதே போல், பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளிலும் போரை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றுடன், “உடனடியாக, உக்ரைனில் இருந்து ரஷ்யப்படைகள் உடனே வெளியேற வேண்டும்” என்றும், பல்வேறு உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

அவற்றுடன், ரஷ்யாவுக்கு உலகின் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. அத்துடன், இங்கிலாந்தும் ரஷ்யாவிற்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

தற்போது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மிக கடுமையான அளவில் போர் மூண்டு, சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான், உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர், ரஷ்ய நாட்டின் ராணுவ பிரங்கிகள் அணி வகுப்பை நிறுத்த தனி ஆளாக வழி மறித்து போராடி நின்றி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன.

ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகரான கீவ்க்குள் சென்று வான் வழி, தரைவழி தாக்குதலை தொடுத்து வருவதால், அங்கு அதிக அளவிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதாவது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், “ரஷ்யவின் போர் டாங்கிகள் பலவும், உக்ரைன் தலைநகரான கீவ் க்குள் முன்னேறி வருகின்றன. அப்போது, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தனியொரு நபர்,  ரஷ்யவின் போர் டாங்கிகள் முன்பு நின்று வழி மறித்து நிற்கிறார். ஆனால், அந்த ரஷ்யவின் போர் டாங்கிகளில் வந்த முதல் வாகனம், அவர் முன்பு இங்கும் அங்குமாக குறுக்கிட்டு குறுக்கிட்டு, அவரை மீறி செல்கிறது.

இதனையடுத்து, அந்த தனி நபர், பின்னால் வந்த வாகத்தை வழி மறித்தும் நிற்கிறார்”. இப்படியாக அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை பார்க்கும் உலக மக்கள் பலரும், தற்போது உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.