சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கண்மணி.சஞ்சீவ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.இந்த சீரியல் நிறைவுக்கு பிறகு இவர் எப்போது ரீ என்ட்ரி தரப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்தனர்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.நடனத்தில் ஆர்வம் கொண்ட லீஷா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.இவர் அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள அம்மன் 3 சீரியலில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தெலுங்கில் ரைட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லீஷா.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் நடிகர் வெங்கடேஷால் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்