ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு! தமிழகத்தில் எப்படி?

ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு! தமிழகத்தில் எப்படி? - Daily news

“இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும்” என்று, தேசியத் தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

“ஆண்டு தோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வுகள், தமிழ்நாட்டில் மாணவ - மாணவிகளின் உயிர்களை காவு வாங்கி வருவதாக” தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதானல், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு மட்டும் தனியாக விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமும் போர் கொடி தூக்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இரு முறை தனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநர் ரவிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. 

அத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி செல்லும் போதெல்லாம் “நீட் தேர்வில் விலக்கு கேட்டு” பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில், நேற்று இரவு டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சற்று முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சற்று முன்பாக சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது கூட, “நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முதல்வர் மீண்டும் வலியுறுத்தியதாகவும்” தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கிடையே தான், “இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும்” என்று, தேசியத் தேர்வு முகமை முன்னதாக அறிவித்து உள்ளது.

“நீட் தேர்வானது, இந்தியாவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேருவதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வாக” அமைந்திருக்கின்றன.

இப்படியான இந்த நீட் நுழைவுத் தேர்வை, தேசியத் தேர்வு முகமை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் தான், “எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக” அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி, “வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நீட தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “மே 7 ஆம் தேதி உடன் முன்பதிவு காலம் முடிவடையும் என்றும், ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள அடுத்த 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், “நடப்பாண்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த முறை நீட் தேர்வு நடைபெற உள்ளதாகவும்” கூறப்பட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

“தேர்வு அட்டவணையை தேசிய தேர்வாணையம் வெளியிடும் என்றும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நேர்முக தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும்” என்றும், தேசியத் தேர்வு முகமை கூறியுள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், தேசியத் தேர்வு முகமை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், “இந்த ஆண்டாவது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு என்று தனியாக விலக்கு அளிக்கப்படுமா?” என்கிற எதிர்பார்ப்பும் பொது மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

Leave a Comment