செக்ஸ் பொம்மையை காதலித்து திருமணம் செய்த பாடி பில்டரால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் பிரபல பாடி பில்டராக உள்ளார் யூரி டோலோச்கோ. இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்கோ எனப்படும் செக்ஸ் பொம்மை, வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.

இதனையடுத்து, அந்த செக்ஸ் பொம்மை உடன், அந்த பிரபல பாடி பில்டர் யூரி டுாலோச்கோ, கடந்த 8 மாதங்களாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த செக்ஸ் பொம்மையான மார்கோவை காதலிப்பதாக, அவர் அறிவித்தார். இதற்கு, அந்நாட்டு மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

இதனால், யாரும் யோசிக்காத நிலையில், சற்று வித்தியாசமாக யோசித்த அவர், “நான் அந்த செக்ஸ் பொம்மையை திருமணம் செய்யப்போவதாக” அறிவித்தார். யூரி டோலோச்கோவின் பொம்மையுடனான காதலுக்கு, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

அதன் படி, பொம்மை உடனான அவரது திருமணம், இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று, யூரி டோலோச்கோ ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அப்போது, உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவித் தொடங்கியதால், அவரது பொம்மை உடனான திருமணம் அப்படியே, அடுத்தடுத்து தள்ளிப் போனது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து உள்ள நிலையில், மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில், யூரி டோலோச்கோ எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு சிறிய விபத்தில் சிக்கி காயம் அடைந்து உள்ளார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக, அவரது திருமணம் மீண்டும் தள்ளிப் போனது. 

இப்படிப்பட்ட சூழலில், செக்ஸ் பொம்மையான மார்கோவிற்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பையும், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், “மார்கோ தனது தோற்றத்தில் அதிகம் அக்கறை கொள்வதாகத் தான் உணர்வதாகவும்” யூரி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமான நிலையில், தற்போது ஒரு வழியாக யூரி டோலோச்கோ - மார்கோ திருமணம் தற்போது நடந்து முடிந்து உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும், யூரி டோலோச்கோ இத்போது வெளியிட்டு உள்ளார்.

முக்கியமாக, அந்த வீடியோவை “இனியும் தொடரும்” என்ற ஆங்கில வாசகத்துடன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

இதற்கு முன்பாக, சிலிகான் வகை பொம்மையான செக்ஸ் பொம்மையான மார்கோவுடன் தான் அதிக நேரம் செலவிட்ட புகைப்படங்களை, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யூரி டோலோச்கோ, தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். 

இதில் குறிப்பாக, அவர் மார்கோ பொம்மையுடன் வெளியே செல்வது, மார்கோவுடன் அதிக நேரம் செலவிடுவது என்று பல வகையிலான புகைப்படங்களும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து இடம் பெற்று வந்திருந்தன.

தற்போது, யூரியின் திருமணம் தொடர்பான வீடியோ தற்போது இணையவாசிகள் இடையே அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருவதுடன், பலரும் தங்களது எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.