தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில் இருப்பது கங்கனாவின் வழக்கம். கங்கனா தற்போது விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். 

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர். 

ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். 

இப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டியுள்ளார் கங்கனா. இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்து சமீபத்தில் ட்விட்டரில் பதிவிடுகையில், இந்திய திரையில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். சிறியதாகவும் அதே சமயம் வலிமையுடனும் இருக்கும் என் அரிய உடலமைப்புக்கு நன்றி. 30 வயதுக்குப் பிறகு தலைவி படத்துக்காக நான் 20 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் எனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என கூறியிருந்தார். 

தலைவி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்கனா. 

மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கணாவின் பங்களா சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்து ரூ.2 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கணா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் கங்கணா மீண்டும் கட்டிடம் கட்டிக் கொள்ளலாம் என்றும், மேற்கொண்டு விரிவுபடுத்தவும், கட்டப்பட்ட இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவும் மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மும்பை மாநகராட்சியின் உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. தீயநோக்கோடு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது சரியாக இருக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

இந்த உத்தரவை வரவேற்றுள்ள கங்கணா, ஒரு தனி நபர் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் அது அந்த தனி நபருக்குக் கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. இடிந்துபோன என் கனவுகளைக் கண்டு சிரித்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் நீங்கள் வில்லனாக இருப்பதால்தான் நான் நாயகியாக இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.