பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய டாஸ்கில் முதன்மையான வேலை என்பது வாடிக்கையாளர்கள் கால் சென்டர் ஊழியர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் கேட்டு அவரை தொந்தரவு செய்து அழைப்பை துண்டிக்க செய்ய வேண்டும். இதில் முதலாவதாக சென்ற அர்ச்சனா பாலாஜியை முடிந்த அளவு டார்ச்சர் செய்தும் அவர் அழைப்பை துடிக்கவில்லை. 

அதன் பின்னர் சோம், கேபியை தொடர்பு கொண்டு பேசிய போது நீங்களே அழைப்பை துண்டித்து விடுங்கள் என்று கூறிய அடுத்த வினாடியே கேபியும் அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் சோம் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட்டுள்ளார்.

ஆஜித்துக்கு கால் செய்து முதலில் அவரை பாடச் சொல்லிக் கேட்டார் ரியோ. பின்னர் அவரிடம் ஆரம்பிக்கலாமா என்று கமல் பாணியில் கேட்ட ரியோ, இந்த வீட்டில் அனைத்தையும் கேம் ஆக நினைத்து செய்பவர்கள் சிலர் உண்டு என்று குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக சனம், அனிதா ஆகியோரை குறிப்பிட்டு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் வெளியே எப்படி பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டத்திலேயே விளையாடுவதாக கூறினார். மேலும் அப்படிப்பட்ட இருவரும் நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று கூறியது கேட்பதற்கு இனிமையாக இருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் தான் அவர் விஷயத்திற்கு வந்தார். ஆம் மெதுவாக பாலாஜியை சீண்டும் நோக்கில், இந்த வீட்டில் அனைத்தையும் strategy என்று கூறுவது யார் என்று ஆஜித்திடம் கேட்டார். அதற்கு அவரும் எந்த ஒரு யோசனையும் இன்றி பாலாஜி என்று கூற அப்போது அனைத்தையும் strategy என்று கூறும் பாலா உங்கள் மீது காட்டும் அன்பும் strategyயா என்று கேள்வி எழுப்பினார். 

இதை ரியோ கூறியதற்கு முக்கிய காரணம் இந்த வீட்டில் அன்பை வைத்து strategical ஆக விளையாட பார்க்கிறார்கள் என்று பாலா கூறிய கருத்தை பொய் ஆக்குவதற்கே ஆகும். பெரிய கேங்குக்கும் சின்ன கேங்குக்கும் இடையே நடக்கும் குரூபிச சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தங்களுக்கு பிடித்தவர்கள், தங்களுக்கு செய்யும் ஃபேவரிசம் குறித்து பேசாதவர்கள், அடுத்தவர்களுக்கு நடக்கும், அடுத்தவர்களுக்கு கிடைக்கும் ஃபேவரிசத்தை பற்றி மட்டுமே பேசிய் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

தற்போது வெளியான ப்ரோமோவில், ஷிவானியிடம் கேள்விகளை கேட்கிறார் ஆரி. நீங்கள் பாலா மேல் வைத்திருப்பது அன்பா அல்லது காதலா என்று கேட்கிறார். ஆரியின் கேள்வியால் பதறுகிறார் ஷிவானி. இதை கண்ட பாலா ஓரமாக அமர்ந்து கைதட்டுகிறார். இதனால் ஆரி மற்றும் பாலாவின் புதிய சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ஷிவானி.