கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு காதலனுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை, அவர்கள் சென்ற கார் விபத்தை ஏற்படுத்திக் காட்டிக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெக்ஸிகோ நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள சால்டில்லோ என்ற பகுதியில், அதி வேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே தலை குப்புர மோதி விழுந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு அந்நாட்டு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது, விபத்துக்குள்ளான காரை ஓட்டிய பாதிக்கப்பட்ட அந்த பெண், தனி ஆளாக எழுந்து, அந்த சாலையில் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்.

அப்போது, அங்கு வந்த போலீசார் விபத்து குறித்து புகார் பதிவு செய்துகொண்டு, அந்த பெண்ணிற்கு உடலில் எதுவும் அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்தனர். அப்போது, மிகவும் லேசான காயத்துடன், அந்த பெண் உயிர் தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு போலீசார் முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு, அந்த பெண்ணிடம் இந்த விபத்து குறித்து விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், “அந்த பெண்ணின் பெயர் எட்னா என்பது தெரிய வந்தது. அத்துடன். அந்த பெண் தான், இந்த காரை ஓட்டி வந்தேன் என்றும், போலீசாரிடம் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த விபத்துக்குள்ளான காருக்குள் அந்த பெண்ணுடன், அவரது காதலர் ரவுல் என்பவரும் உடன் இருந்தார்” என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், போலீஸ் வழக்கிலிருந்து தனது காதலனை காப்பாற்ற அந்த பெண் “விபத்து என்னால் தான் ஏற்பட்டது” என்று பொய் கூறியதும் தெரிய வந்தது.

குறிப்பாக, “விபத்தில் சிக்கிய இளம் பெண் எட்னாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக, அவரது வீட்டில் உள்ளவர்களை செல்போன் மூலம் போலீசார் அழைத்து உள்ளனர். 

அப்போது, இளம் பெண் எட்னாவை அழைத்துப் போக அவரது வீட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அந்த நபர் தான் எட்னாவின் கணவர்” என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

முக்கியமாக, “இளம் பெண் எட்னா, தனது கணவருக்குத் துரோகம் செய்து, அவரை ஏமாற்றும் வகையில், தன்னுடைய காதலர் ரவுலுடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததும்” விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய காதலன் ரவுலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இளம் பெண் எட்னாவை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

இப்படியாக, ஒர கார் விபத்து மூலம், மனைவி தனது கணவரை ஏமாற்றி காதலன் உடன் சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.