“பாகிஸ்தானில் கடந்த 2017 முதல் கடந்த ஜனவரி வரையில் கிட்டதட்ட 40,585 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளதாக” தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

உலகம் முழுவதும் முன்பை காட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த ஒரு விசயமாக இருக்கிறது.

இந்தியாவில் கூட, கொரோனா ஊடரங்கிற்குப் பிறகு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் பார்க்கும் போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்களை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்து பிறகு, அவர்களை கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர்” என்கிற குற்றச்சாட்டும் பரவலாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அதாவது, “பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்புகளோ அல்லது அரசியல்வாதிகளோ யாரும் பேச முன்வரவில்லை என்றும், அங்கு   பாதிக்கப்பட்டோருக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்களில் கூட நீதி கிடைக்கவில்லை” என்றும், என லண்டனை அடிப்படையாக கொண்ட, பாகிஸ்தானின் சிறுபான்மையோருக்கான நீதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் அனிலா குல்சார் என்பவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், “இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும்” என்று, உறுதியளித்திருக்கும் நிலையிலும் கூட, அங்கு இது போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன” என்கிற குற்றம்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், “பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், நடப்பு ஆண்டு ஜனவரி வரையில் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே 36 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 585 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர்” என்றும், பஞ்சாப் மாகாண போலீசார் அதிர்ச்சிகரமான புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளனர்.

மேலும், “இவர்களில் கடந்த 4 ஆண்டுகளில், 3,571 சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர் என்றும், அவர்களை இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றும், அவர்களின் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை” என்றும், அந்நாட்டு போலீசாரின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, தற்போது வெளியாகி உள்ள புதிய புள்ளி விவரத்தின் அடிப்படையில்,

2017 ஆம் ஆண்டில் 136 பேரும்
2018 ஆண்டில் 234 பேரும்
2019 ஆம் ஆண்டு 344 பேரும் 
2020 ஆம் ஆண்டில் 462 பேரும்

கடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

மிக முக்கியமாக, கொரோனா பாதிப்பின்போது ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2021 ஆம் ஆண்டில் 2,395 சிறுமிகள் மற்றும் பெண்கள் பாகிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்டு உள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டில் கடத்தலுக்கு ஆளானவர்களில் பலரும் லாகூரை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்” என்கிற அதிர்ச்சி தகவலும் அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.