விஜய் டிவியில் என்ட்ரி தரும் ஜீ தமிழ் சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | February 28, 2022 19:21 PM IST
மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கி விளம்பர படங்கள் குறும்படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து இப்போது சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் பவ்யாஸ்ரீ.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் திருமதி ஹிட்லர்.அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடித்தனர்.
350 எபிசோடுகளை கடந்த இந்த தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் பவ்யாஸ்ரீ.இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடர் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார் பவ்யா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பவ்யா தனது புகைப்படம் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இதுவரை ஜீ தமிழில் மட்டுமே நடித்து வந்த இவர் அடுத்ததாக விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Pattas heroine Mehreen Pirzada gets engaged to Bhavya Bishnoi - wishes pour in!
12/03/2021 07:36 PM
Padma Shri winner to croon for Mohanlal's Lucifer
15/03/2019 01:43 PM