தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியாக பல கோடி பார்வையாளர்களை கவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஆரம்பமானது பிக்பாஸ் அல்டிமேட்.

பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண இயலும். முன்னதாக உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் பிக் பாஸ் சீசன் 6 மீண்டும் சந்திப்பதாகவும் தெரிவித்து விடை பெற்று சென்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய எபிசோடில் சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் முறையாகத் தொகுத்து வழங்கினார்.

அதிரடியான வாக்குவாதங்களாடு நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக முதலில் எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த காமெடியனும் பிரபல நடிகருமான KPY சதீஷ் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

பிக்பாஸில் அடிக்கடி கூறப்படும் வாக்கியமான எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும்படி KPY சதீஷ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் உள்ளே நுழைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் இறுக்கமாக நகர்ந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் வீடு சதீஷின் வருகைக்குப் பிறகு கலகலப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.