சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான  விஜய் டிவியில் ரசிகர்களின் அபிமான  ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஆரவ் மிகச் சிறப்பாக விளையாடி பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். 

ஆரம்பத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆரவ் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆரவ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவான மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார்.

இதனை அடுத்து ஆரவ் நடிப்பில் உருவான ராஜபீமா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக மீண்டும் வா அருகில் வா எனும் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே திங்க் ஸ்பெஷல்ஸ் வழங்கும் பிக் பாஸ் ஆரவின் புதிய வா மணவாளா மியூசிக் வீடியோ தற்போது வெளியானது 

இயக்குனர் ஜெகன் பழனிவேல் இயக்கத்தில் நடிகர் ஆரவ் மற்றும் நடிகை பிரியங்கா திம்மேஷ் இணைந்து நடித்துள்ள வா மணவாளா ஆல்பம் பாடலுக்கு ராஜ் தில்லையம்பலம் இசையமைத்துள்ளார். ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவில் வா மணவாளா பாடலுக்கு தமிழ்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். அசத்தலான வா மணவாளா மியூசிக் வீடியோ இதோ…