சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் H.வினோத். இதனை அடுத்து அஜித் குமாருடன் இணைந்து H.வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன பின்பு படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து H.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாரான வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஹூமா குரேஷி, சுமத்ரா, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

 தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கிய வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து என்ன குறை என்னும் எமோஷனல் பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.