இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷா. தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் என தென்னிந்தியாவின் முன்னணி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த கடுகு மற்றும் கோலிசோடா 2 திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

கடைசியாக இந்த ஆண்டு இயக்குனர் ஜெயசங்கர் இயக்கத்தில் நடிகர் R.K.சுரேஷ் கதாநாயகனாக நடித்த வேட்டை நாய் திரைப்படத்தில் நடிகை சுபிக்ஷா கதாநாயகியாக நடித்திருந்தார்.அடுத்ததாக இவர் நடித்துள்ள யார் இவர்கள் மற்றும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்கள்  விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவளித்து வருகிறார். நடிகை சுபிக்ஷாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சுபிக் ஷா வின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கவர்ச்சியான உடையில் இருக்கும் அந்த போட்டோ ஷூட்-ன் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் நடிகை சுபிக்ஷாவின் முகம் நடிகை அஞ்சலியின் சாயலில் ஒத்திருப்பதாகவும், மறுபுறம் கவர்ச்சியான புகைப்படத்தில் தொடை அழகை காட்டுவதால் நடிகை ரம்பாவின் இடத்தை  பிடித்து விடுவார் என்றும் பேசி வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த நடிகை சுபிக்ஷாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது இரண்டு ஆகி தீயாய் பரவி வருகின்றன.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subiksha (@subikshaoffl)