எம்.பி.க்கு கொடுக்கப்பட்ட பாஸில் சென்ற பல் மருத்துவர் ஒருவர், இளம் பெண்ணுடன் இருட்டில் நின்றிருந்த காரில் குதுகலமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இரு புறமும் சதுப்புநில பகுதிகள் இருக்கின்றன. இதனால், அங்கு சாலையைப் பகுதிகளில் ஒட்டி புதர் போன்று செடிகள் வளர்ந்து இருக்கும் நிலையில், அந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அங்கு வழியாக வாகனங்களில் வருபவர்கள் இரவு நேரத்தில் அங்கு நிறுத்திவிட்டு, சதுப்புநிலத்தில் இளைப்பாரும் பறவைகளைக் கண்டு ரசிப்பது வழக்கம். 

அத்துடன், இந்த பகுதியில் இரவு நேரங்களில் பாலியல் தொழில் நடந்து வருவதாகவும் சில முறைகள் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தான், கடந்த 10 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், அங்குள்ள புதரை ஒட்டிய பகுதியில் ஒரு சொகுசு கார் நின்று உள்ளது. அந்த நேரம் பார்த்து, பள்ளிகரணை காவல் ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சென்று உள்ளார். அப்போது, நீண்ட நேரமாக அந்த சொகுசு கார் அங்கு நிற்பதைப் பார்த்து சந்தேகப்பட்ட அவர், அதன் அருகில் சென்று உள்ளார்.

அப்போது, இருட்டுக்குள் நின்றுக்கொண்டிரந்த அந்த கார் ஆடிக் கொண்டிருந்தது.

இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் பிரவின் ராஜேஷ், கார் அருகில் சென்று பார்த்து உள்ளார். அப்போது, அந்த காரில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் அரை குறை ஆடைகளோடு உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த  காவல் ஆய்வாளர் பிரவின் ராஜேஷ், அந்த காரை தட்டி உள்ளார். போலீசாரை கண்டதும், அந்த காருக்குள் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளம் பெண், தனது அரை குறை ஆடையுடன் காரில் இருந்து கீழே குதித்து, தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து, காரில் இருந்த இளைஞரைப் பிடித்து அந்த போலீசார் விசாரித்து உள்ளார். அப்போது, தென் சென்னை திமுக எம்பிக்கு தான் நெருக்கமானவர் என்று கூறி, எம்.பி.யின் பாஸ் ஒன்றையும் காட்டி உள்ளார். 

இதனையடுத்து, அந்த போலீசார் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனைத் தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட இளைஞர் பற்றி கேட்டதற்கு “அவர் யார் என்றே தெரியாது” என்று, கூறிவிட்டார்.

பின்னர், அவரை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அந்த நபர் போலியாக அச்சிட்டு வைத்திருந்த எம்.பி. பாஸையும், அந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் மடிப்பாக்கத்தை சேர்ந்த 27 வயதான ஷியாம் கண்ணா என்பதும், அவர் பல் மருத்துவர் என்பதும் தெரிய வந்தது. 

அத்துடன், “காரில் இருந்த பெண் தனது தோழி என்றும், ஊரடங்கு காலம் உள்ளிட்ட பல நேரங்களில் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தைத் தவிர்க்கவும் மோசடியில் ஈடுபட்டதாகவும்” அந்த நபர் ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த பள்ளிகரணை போலீசார், அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.