தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சித்தார்த் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் சித்தார்த் நடிப்பில் தமிழில் அருவம் திரைப்படம் வெளியானது.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா ஆன்தாலஜி வெப் சீரிஸில் இன்மை எனும் எபிசோடில் நடித்திருந்தார். வெளியான 9 எபிசோடுகளில் சித்தார்த்தின் இன்மை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மஹா சமுத்திரம் திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாரான மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகர் சர்வானந்த், அதிதி ராவ் ஹைடாரி, அனு இமானுவேல்,ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடித்துள்ளார். 

A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரித்துள்ள மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் மஹா சமுத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சித்தார்த் மற்றும் சர்வானந்தின் அதிரடியான மஹா சமுத்திரம் டிரைலரை கீழே உள்ள லிங்கை காணலாம்.