தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் யோகிபாபு அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் & A1 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் மெடிக்கல் மிராக்கிள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் வாரிசு படத்திலும் யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சைன்ஸ் ஃபிக்ஷன் ஏலியன் படமாக தயாராகி இருக்கும் அயலான், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன்,இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள காஃபி வித் காதல், அருண் விஜய்யின் யானை, லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் என யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன.

தொடரந்து யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா, சலூன் ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் அனுச்சரண் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பன்னிக்குட்டி. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள பன்னிக்குட்டி படத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

மேலும் திண்டுக்கல் ஐ லியோனி, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ள பன்னிகுட்டி படத்திற்கு K இசையமைத்துள்ளார். இந்நிலையில் பன்னிகுட்டி திரைப்படம் வருகிற ஜூலை 8ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

She's coming 🐷 to meet you all. #PanniKutty 🐖 releasing at screens near you on July 8th 📽️

@iYogiBabu #Karunakaran #Ramar @thangadurai123 | 🎬 @AnucharanM | 🎶 @K_RiverRecords | 💰 @supertalkies @sameerbr | 📢 @onlynikil | 🧑🏻‍🎨 @KannadasanDKD pic.twitter.com/x0iV1eSKKV

— Lyca Productions (@LycaProductions) June 24, 2022