தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகராக இன்று வரை நம்மை மகிழ்வித்து கொண்டிருப்பவர் நடிகர் செந்தில். தனக்கே உரித்தான பாணியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவரின் படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர்.

குறிப்பாக நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைந்து செந்தில் நடித்த அனைத்து காமெடிகளும் யூட்யூபில் அனைத்து வயதினராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்போது நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து வரும் தடை உடை படத்தில் நடிகர் செந்தில் மற்றும் அவரது மகன் மணி பிரபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் தடை உடை திரைப்படத்தை முத்ரா பிலிம் ஃபேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மிஷா நரங் கதாநாயகியாக நடிக்கும் தடை உடை திரைப்படத்தில் பிரபு, ரோகினி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

டெமெல் சேவியர் ஒளிப்பதிவில், ஆதீஃப் இசையமைத்திருக்கும் தடை உடை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் செந்தில் மற்றும் அவரது மகன் மணி பிரபு இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹாவுடன் செந்தில் மற்றும் அவரது மகன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.அந்த புகைப்படங்கள் இதோ…
 

Welcome on board legendary actor #Senthil sir. @actormaniprabhu join the cast of #ThadaiUdai
Real father and son acting as reel father and son too!
@MffProduction @ReshmiMenonk @NarangMisha @Rockyj14 @shakthi_dop @b_aathif @ponkathiresh @Vairamuthu @proyuvraaj pic.twitter.com/EGZPBMJFGc

— Simha (@actorsimha) June 23, 2022