பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நகுல் தொடர்ந்து நடித்த காதலில் விழுந்தேன் & மாசிலாமணி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக காதலில் விழுந்தேன் & மாசிலாமணி படங்களை தொடரந்து 3வது முறையாக நகுல் மற்றும் சுனைனா இணைந்து இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள எரியும் கண்ணாடி திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக நகுல் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் வாஸ்கோடகாமா.

இயக்குனர் RG கிருஷ்ணன் (RGK) இயக்கத்தில் நகுல் மற்றும் K.S.ரவிக்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாஸ்கோடகாமா திரைப்படத்தில் மன்சூர் அலிகான், முனீஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, படவா கோபி, நமோ நாராயணா, ரவி மரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

DATO'B.சுபாஷ்கரன் தயாரித்துள்ள வாஸ்கோடகாமா படத்திற்கு N.S.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய அருண்.NV இசையமைத்துள்ளார். வாஸ்கோடகாமா படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வாஸ்கோடகாமா திரைப்படத்தின் கலக்கலான GLIMPSE வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…