தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக தொடர்ந்து நல்ல கதைக் களங்களையும் பலவிதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டான சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமான பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை மற்றும் கா உள்ளிட்ட த்ரில்லர் திரைப்படங்களும் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன.

அடுத்ததாக நடிகர் சிபி சத்யராஜ் உடன் இணைந்து வட்டம், பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார்.இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் R.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. 

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், B4U AND IVY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கும் அனல் மேலே பனித்துளி படத்தில் ஆதவ் கண்ணதாசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும், அனல் மேலே பனித்துளி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நேரடியாக SONYliv OTT தளத்தில் ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து மிட்டாய் மிட்டாய் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ...