தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தனது முதல் தேசிய விருதை பெற்றார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைந்திருக்கும் நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் சூர்யா 42. ஸ்டுடியோ கிரீன் மற்றும் uv கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க 3D தொழில் நுட்பத்தில் தயாராகும் பிரம்மாண்டமான சூர்யா 42 திரைப்படத்தை பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டனி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லீ, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு நடிகராக தமிழ் திரையுலகில் களமிறங்கி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினர். 13 ஆண்டு பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய யோகி பாபு இதுகுறித்து மனம் திறந்து பேசிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

On the occasion of 'Yogi' turning 13, #YogiBabu celebrated by cutting a cake on the sets of #Suriya42 directed by #SiruthaiSiva. He expressed his heartfelt thanks to the film fraternity, media, fans, his family, Directors #SubramaniamShiva, #Ameer, #RamBala & #SundarC 🥳👍🏼🌟 pic.twitter.com/qLdDZPNgBk

— RIAZ K AHMED (@RIAZtheboss) November 28, 2022