பல கோடி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த படங்கள்  மிகுந்த ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தயாராகும் தளபதி 67 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பாடல்கள் அனைத்தையும் தான் எழுதியிருப்பதாக ராம்ஜோகய்யா சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “என்னுடைய 200 சதவீதத்தை கொடுத்து எழுதி இருக்கிறேன்… பாடல்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். கட்டாயமாக இசையமைப்பாளர் தமனின் இசை விருந்தாக பாடல்கள் இருக்கும். நம்புங்கள்! நான் சில பாடல்களை கேட்டிருக்கிறேன்.” என குறிப்பிட்டு ராம்ஜோகய்யா சாஸ்திரி பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Varisu telugu is my next full album and i give my 200 percent…wait for the album..such a passionate director @directorvamshi garu is..
Am sure it will be a feast with thamudu @MusicThaman s hard hitting music…trust me i listened to few of the tracks💕👍😎

— RamajogaiahSastry (@ramjowrites) November 27, 2022