பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக வெளிவந்த வலிமை ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடி இருக்கும் சில்லா சில்லா பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மேலும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் விதமாக மஞ்சு வாரியர் துணிய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ…
 

Thrilled to have sung for @GhibranOfficial !!! Happy to be part of a very interesting song in #Thunivu! Waiting for you all to hear it! ❤️#ajithkumar #AK #hvinoth pic.twitter.com/G934UX79sg

— Manju Warrier (@ManjuWarrier4) November 26, 2022