இயக்குனர் & நடிகர் என தனி முத்திரை பதித்த SJ.சூர்யா அவர்கள் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ராம்சரண் நடிப்பில் தயாராகும் RC15 திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக SJ.சூர்யா நடித்து வருகிறார். 

இதனிடையே முதல் முறையாக வெப்சீரிஸில் களமிறங்கியிருக்கும் SJ.சூர்யா, நடிப்பில் தயாராகியுள்ள வெப்சீரிஸ் வதந்தி. விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரித்துள்ள வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸை கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். 

SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வதந்தி வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வருகிற டிசம்பர் 2-ம் தேதி முதல் வதந்தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் வதந்தி வெப் சீரிஸ் குழுவினரோடு நமது கலாட்டா சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை SJ.சூர்யா பகிர்ந்து கொண்டார். அதில், “இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் முழு கதையை கேட்க முடியாது. 120 பக்க முழு கதையை சொல்லுங்கள் என அவர்களிடம் கேட்க முடியாது. ஒரு அவுட்லைன் கேட்கலாம். வேறு எதுவும் அங்கு கேட்க வேண்டியது இல்லை. அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு நாம் செல்லலாம். என்ன ஒன்று சீன் பேப்பரை மட்டும் ஒரு நாள் முன்பே கொடுத்து விடுங்கள் என கேட்டு வாங்கிக்கொண்டு என்னை தயார்படுத்திக் கொள்வேன்” என SJ.சூர்யா தெரிவித்துள்ளார். SJ.சூர்யாவின் அந்த முழு பேட்டி இதோ…