தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் பிரபல நடிகராகவும் திகழும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் செல்ஃபி. இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரைய‌ரங்க‌ளி‌ல் ரிலீஸான செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நீட் தேர்வு & கட்டணங்கள் தொடர்பாக கல்லூரிகளில் நடைபெறும் ஊழல், தற்கொலைகள் மற்றும் கொலைகள் குறித்து மிகத் தைரியமாக பேசிய செல்ஃபி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. 

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவி.பிரகாஷ் குமாரின் செல்ஃபி திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இருந்து பிரபல OTT தளமான aha தமிழ் OTT தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.