இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.  இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #MEGA154 திரைப்படத்தில் நடிக்கவுள்ள சிரஞ்சீவி இதனையடுத்து இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். தொடர்ந்து சிரஞ்சீவி அடுத்ததாக புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளாதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி அவரது மகன் நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ஆச்சார்யா படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க, பவண், சோனு சூட், ஜிஷூ செங்குப்தா, சௌரவ் லோகேஷ், கிஷோர், தணிக்கெல்லா பரணி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

நடிகை ரெஜினா கெஸ்ஸன்ட்ரா சானா கஷ்டம் என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். கோனிடெலா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் மேட்னி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ஆச்சாரியா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் மணிசர்மா இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. மாஸான அந்த ட்ரைலர் இதோ…