“இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை வரவேற்கிறேன் என்றும், இந்தி மொழி திணிப்பை தமிழக பாஜக ஒரு போதும் அனுமதிக்காது” என்றும், பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள சம்பவம் பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல” என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது. 

அத்துடன், “இந்திய அமைச்சரவையின் செயல்பாடுகள் 70 சதவீதம் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்ட என்றும், வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும் போது பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்றும், அமித் ஷா பேசியிருந்தார்.

இதனால், “இந்தியை, இந்தியாவின் அலுவலல் மொழியாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்புக்கு” எதிராக, தமிழ்நாட்டின் பிரபலங்கள் பலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், “இந்தி மொழி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது” என்று? தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தலைமைக்கு எதிராக முதன் முதலில் கருத்து தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜகவும் இந்தி திணிப்பை விரும்பவில்லை” என்று, குறிப்பிட்டார். 

“இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டுமானால், தமிழ் பள்ளிகளை திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும்” என்றும், கூறினார். 

அத்துடன், “இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்தை, தமிழக பாஜக வரவேற்கிறது என்றும், தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று” என்றும்,  அண்ணாமலை, தெரிவித்தார்.

மேலும், “தற்போதைய சூழலில் 5 மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதல் மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், அண்ணாமலை, கேட்டுக்கொண்டார். 

“அப்படி, கூடுதலாக மொழிகளை கற்றுக் கொண்டால், நல்லதுதானே” என்றும், அண்ணாமலை நாசுக்காக பேசினார்.

குறிப்பாக, “நான் இந்தி பேச மாட்டேன், உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்று கொள்ளுங்கள் என்றும், இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை” என்றும், தெரிவித்தார். 

முக்கியமாக, “இந்தி திணிப்பை தமிழக பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது” என்றும்,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விளக்கம் அளித்தார்.

மிக முக்கியமாக, “2 வது தேசிய கல்வி கொள்கையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும், ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையில் இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது” என்றும், அண்ணாமலை புதிதாக விளக்கம் தந்தார்.