ஒட்டுமொத்த இந்திய திரை உலகின் கவனத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பிய பெருமை கேஜிஎப் திரைப்படத்தையே சேரும். முன்னதாக சூப்பர் ஹிட்டான கேஜிஎஃப் 1 படத்தின் இமாலய வெற்றியை தொடரந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் ரிலீசானது.

தற்போது 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டால் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது. புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின்  அத்திரைப்படத்தை மொழிகளை கடந்து அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்

அதிரடியான ஆக்ஷன்  மாஸான பஞ்ச் வசனங்கள் பிரமிக்க வைக்கும் காட்சிகள் என அனைவரையும் கவரந்த கேஜிஎஃப் திரைப்படத்தின் அம்மா சென்டிமென்ட் எமோஷனும் அவர்களை வெகுவாக ஈர்த்தது அந்த வகையில் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தில் இடம் பெற்ற அம்மா பாடலான அதிலும் நீ பாடல் வீடியோ நேற்று(May 8) அன்னையர் தினத்தன்று வெளியானது. எமோஷனலான அந்த பாடல் வீடியோ இதோ…